Thursday, March 28, 2013

ஸ்ரீ லலிதா பஞ்சரத்நம்


ஸ்ரீ லலிதா பஞ்சரத்நம் 

ப்ராத:  ஸ்மராமி  லலிதா  வதநாரவிந்தம் 
பிம்பாதரம்  ப்ருதுல  மௌக்திக  ஸோபிநாஸம் |
ஆகர்ண  தீர்க்க  நயநம்  மணிகுண்டலாட்யம் 
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல  பாலதேஸம் ||  1

ப்ராதர்  பஜாமி  லலிதா  புஜகல்பவல்லீம் 
ரக்தாங்குலீய  லஸதங்குலி பல்லவாட்யாம் |
மாணிக்ய  ஹேம  வலயாங்கத  ஸோபமாநாம் 
புண்ட்ரேக்ஷு  சாப  குஸுமேஷு  ஸ்ருணீ  ததாநாம் ||  2

ப்ராதர்  நமாமி  லலிதா  சரணாரவிந்தம் 
பக்தேஷ்டதாந  நிரதம்  பவஸிந்துபோதம்  |
பத்மாஸநாதி  ஸுரநாயக  பூஜநீயம் 
பத்மாங்குஸ  ஸுதர்ஸந  லாஞ்ச்சநாட்யம்  || 3

ப்ராத: ஸ்துவே பரஸிவாம்  லலிதாம்  பவாநீம் 
த்ரய்யந்த  வேத்யவிபவாம்  கருணாநவத்யாம்  |
விஸ்வஸ்ய  ஸ்ருஷ்டி  விலயஸ்திதி ஹேதுபூதாம் 
விஸ்வேஸ்வரீம்  நிகமவாங்  மநஸாதி  தூராம்  ||   4

ப்ராதர்  வதாமி லலிதே தவ  புண்யநாம 
காமேஸ்வரீதி  கமலேதி  மஹேஸ்வரீதி   |
ஸ்ரீஸாம்பவீதி  ஜகதாம்  ஜநநீ  பரேதி 
வாக்தேவதேதி  வசஸா  த்ரிபுரேஸ்வரீதி  ||     5

ய: ஸ்லோக  பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா :
ஸௌபாக்யதம் ஸுலலிதம் படதி  ப்ரபாதே  |
தஸ்மை  ததாதி  லலிதா  ஜடிதி  ப்ரஸந்நா 
வித்யாம் ஸ்ரியம்  விபுலஸௌக்ய  மநந்தகீர்த்திம் || 6

                       *************************** 





Monday, March 25, 2013

மூன்றாம் திருமுறை - (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)


பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்)

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.  1

பொழிப்புரை :

தூங்கும்பொழுதும் , விழித்திருக்கும் பொழுதும் , மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள் . பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி
இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே .


மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.    2

பொழிப்புரை :

மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும் .


ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்  
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.   3

பொழிப்புரை :

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி , ஞானவிளக்கம் பெறச் செய்து , அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந் தெழுத்தேயாகும் .


நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.     4

பொழிப்புரை :

புண்ணியர் , பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும் .


கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.    5


பொழிப்புரை :

வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை , அசோகு , மா , முல்லை , கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும் . இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐந்தாகும் . சோலைகள் அரிசந்தனம் , கற்பகம் , சந்தானம் , பாரிசாதம் , மந்தாரம் என ஐந்தாகும் . பாம்பின் படம் ஐந்து ஆகும் . செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும் . இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப , மந்திரமும் திருவைந்தெழுத்தே யாகும் .


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே     6

பொழிப்புரை :

தும்மல் , இருமல் தொடர்ந்து வந்த பொழுதும் , கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும் , முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும் , இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும் .


வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.         7


பொழிப்புரை :

இறப்பு , பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன . தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன . நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும் .


வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.         8

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும் . முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான் . அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு , செபித்த அளவில் அவர்களுக்கு
அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும் .


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.      9


பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை
நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந் தெழுத்தாகும் .


புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.     10


பொழிப்புரை :

புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும் . சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.


நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர் உம்ப ராவரே.            11

பொழிப்புரை :

நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும் , ஞானசம்பந்தன் , நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய , கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள் .

                   
              ***********************

Wednesday, March 20, 2013

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்



விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயயா
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ச்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே (1)

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ச்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே  (2)
 
யச்யைவ ச்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே (3)
 
நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ச்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே  (4)

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ச்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே  (5)

ராஹு கிரஸ்த திவாகரேந்து சத்ருசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே (6)

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ச்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே  (7)

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வச்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே (8)

பூரம்பாம்ச்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே (9)

சர்வாத்மத்வமிதி ச்புடீக்ருதமிதம் யச்மாதமுஷ்மின் ச்தவே
தேனாச்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச  சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம்  (10)

     

சிவ பஞ்சாக்ஷர ஸ்லோகம்





நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை
காராய நமசிவாய

மந்தாகினி சலில சந்தன சர்சிதாய
நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய
தஸ்மை
காராய நமசிவாய

சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த
சூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை
சிகாராய நமசிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்தர தேவார்சித்த சேகராய
சந்த்ரார்க்க வைச்வானர  லோச்சனாய
தஸ்மை
காராய நமசிவாய

யக்ய ஸ்வரூபாய ஜடாதராய
பினாகஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை
காராய நமசிவாய

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம்




வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதசீபுஷ்ப சங்காசம் ஹார நூபுர சோபிதம்
ரத்ன கங்கண  கேயூரம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக சம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம்
விலசத் குண்டலதரம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தார கந்த சம்யுக்தம் சாருஹாசம் சதுர்புஜம்
பர்ஹி பிச்சாவ சூடாங்கம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்லபத்ம பத்ராக்ஷம் நீலஜீமுத சன்னிபம்
யாத்வானாம் ஷிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேலி சம்யுக்தம் பீதாம்பர சுஷோபிதம்
அவாப்த துளசிகந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகானாம் குசத்வந்தவ குங்குமான்கித வக்ஷசம்
ஸ்ரீநிகேதம் மகேஷ்வாசம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்சாங்கம் மகோரஸ்கம் வனமாலா விராஜிதம்
சங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கிருஷ்னாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி  

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்


 
திருவதிகைவீரட்டானம்

(நான்காம் திருமுறை)


பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது
வணங்குவன் எப்பொழுதும்  தோற்றாதென் வயிற்றின் 
அகம்படியே  குடரோடு துடக்கி முடக்கியிட  ஆற்றேன் 
அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.1

பொழிப்புரை :

கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.

2நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.2

3 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மனே. 4.1.3

4 முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.4

5 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.5

6 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவின் மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.16

7 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே. 4.1.7

8 வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற் சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.8

9 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.9

10 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.10

இத்தலம் நடு நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்,
தேவியார் - திருவதிகைநாயகி.

இப்பதிகம் சூலை நோய் தீர ஓதியருளியது.

திருச்சிற்றம்பலம்

Tuesday, March 19, 2013

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்

***********************

ஓம் ஸ்கந்தாய நமஹ  
ஓம் குஹாய நமஹ
ஓம் ஷண்முகாய நமஹ
ஓம் பால நேத்ரஸதாய நமஹ
ஓம் ப்ரபவே நமஹ   {5}

ஓம் பிங்களாய நமஹ     
ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ
ஓம் சிகிவாஹுனாய நமஹ
ஓம் த்விஷட் புஜாய நமஹ
ஓம் த்விஷண் நேத்ராய நமஹ  {10}  

ஓம் சக்தி தராய நமஹ
ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே நமஹ
ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
ஓம் மத்தாய நமஹ {15}

ஓம் ப்ரமத்தாய நமஹ
ஓம் உ ன்மத்தாய நமஹ
ஓம் ஸரஸைன்ய ஸரக்ஷகாய நமஹ
ஓம் தேவசேனாபதயே நமஹ
ஓம் ப்ராக்ஞாய நமஹ  {20}

ஓம் க்ருபாளவே நமஹ
ஓம் பக்த வத்ஸலாய நமஹ
ஓம் உ மா ஸதாய நமஹ
ஓம் சக்தி தராய நமஹ
ஓம் குமாராய நமஹ  {25}

ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
ஓம் ஸேனான் யே நமஹ
ஓம் அக்னிஜன்மனே நமஹ
ஓம் விசாகாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய நமஹ  {30}

ஓம் சிவஸ்வாமினே நமஹ
ஓம் கணஸ்வாமினே நமஹ
ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
ஓம் ஸநாதனாய நமஹ
ஓம் அனந்த சக்தயே நமஹ   {35}

ஓம் அEக்ஷaப்யாய நமஹ
ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
ஓம் கங்கா ஸதாய நமஹ
ஓம் சரோத் பூதாய நமஹ
ஓம் ஆஹுதாய நமஹ  {40}

ஓம் பாவகாத்மஜாய நமஹ
ஓம் ஜ்ரும்பாய நமஹ
ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
ஓம் உ ஜ்ரும்பாய நமஹ
ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ {45}

ஓம் ஏகவர்ணாய நமஹ
ஓம் த்விவர்ணாய நமஹ
ஓம் திரிவர்ணாய நமஹ
ஓம் ஸமனோகராய நமஹ
ஓம் சதுர்வர்ணாய நமஹ  {50}

ஓம் பஞ்சவர்ணாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் அஹுஸ்பதயே நமஹ
ஓம் அக்னிகர்பாய நமஹ
ஓம் சமீகர்பாய நமஹ  {55}

ஓம் விச்வரேதஸே நமஹ
ஓம் ஸராரிக்னே நமஹ
ஓம் ஹுரித்வர்ணாய நமஹ
ஓம் சுபகராய நமஹ
ஓம் வாஸவாய நமஹ  {60}

ஓம் வடுவேஷப்ருதே நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் கபஸ்தினே நமஹ
ஓம் கஹுனாய நமஹ
ஓம் சந்த்ரவர்ணாய நமஹ   {65}

ஓம் களாதராய நமஹ
ஓம் மாயாதராய நமஹ
ஓம் மஹாமாயினே நமஹ
ஓம் கைவல்யாய நமஹ
ஓம் சங்காIஸதாய நமஹ {70}

ஓம் விச்வயோனயே நமஹ
ஓம் அமே யாத்மனே நமஹ
ஓம் தேஜோநிதயே நமஹ
ஓம் அனாமயாய நமஹ
ஓம் பரமேஷ்டினே நமஹ {75}

ஓம் பரப்ரஹுfமணே நமஹ
ஓம் வேதகர்பாய நமஹ
ஓம் விராட்ஸதாய நமஹ
ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ  {80}

ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
ஓம் சோராக்னாய நமஹ
ஓம் ரோக நாசனாய நமஹ
ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ   {85}

ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
ஓம் டம்பாய நமஹ
ஓம் பரம டம்பாய நமஹ
ஓம் மஹாடம்பாய நமஹ
ஓம் வ்ருஷாகபயே நமஹ  {90}

ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
ஓம் அனீச்வராய நமஹ
ஓம் அம்ருதாய நமஹ
ஓம் ப்ராணாய நமஹ  {95}

ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
ஓம் வ்ருத்த ஹுந்த்ரே நமஹ
ஓம் வீரக்னாய நமஹ
ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
ஓம் மஹுதே நமஹ  {100}

ஓம் ஸப்ரஹுfமண்யாய நமஹ
ஓம் குஹுப்aIதாய நமஹ
ஓம் ப்ரஹுfமண்யாய நமஹ
ஓம் ப்ராஹுfமண ப்ரியாய நமஹ
ஓம் வம்ச விருத்திகராய நமஹ  {105}

ஓம் வேத வேத்யாய நமஹ
ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
ஓம் மயூர வாஹுனாய நமஹ     {108}


நாநாவித பத்ரபுஷ்பாணி ஸமர்பபயாமி
*********************************************************************